அடுத்த மாதம் கல்யாணம்.. ஸ்மைல் டிசைன் செய்ய சென்றவர் பலியான சோகம்..!
28 வயதான லட்சுமி நாராயணன் என்பவருக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய புன்னகையை மேம்படுத்தும் விதமாக ஸ்மைல் டிசைன்ஸ் சிகிச்சை எடுக்க முடிவு செய்துள்ளார்.
லட்சுமி நாராயணன் இதையடுத்து ஹைதராபாத் ஜூபிலி கிட்ஸில் அமைந்துள்ள பிரபல எஃப்எம்எஸ் மருத்துவமனையில் பிப்ரவரி 14-ஆம் தேதியன்று ஸ்மைல் டிசைன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின் போது லட்சுமி நாராயணன் மயங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகமான அளவு மயக்க மருந்து செலுத்தப்பட்ட காரணத்தால் அவர் மயங்கியதாக ஊழியர்கள் தங்களுக்கு தெரியப்படுத்தியவுடன் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு கூட்டிச் சென்ற பொழுது லட்சுமி நாராயணன் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக அவரது அப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள் தங்களிடம் எதுவும் தெரியப்படுத்தவில்லை என கூறும் தந்தை லட்சுமி நாராயணனுக்கு வேறு எந்த விதமான உடல் பாதிப்பும் இல்லை எனக் கூறியுள்ளார். இந்த மரணத்திற்கு மருத்துவர்கள் தான் பொறுப்பு எனவும் அவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





