ஸ்கெட்ச் போட்டு ஏடிஎம்மில் கொள்ளை அடித்த மர்ம நபர்கள்..!
தெலுங்கானாவில் கேஸ் கட்டரை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை வெட்டி 25 லட்ச ரூபாயை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகபூபா தர்கே உள்ள பயான் நகரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் மையம் உள்ளது.
காரில் வந்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்து ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் வெட்டி அதில் வைக்கப்பட்டிருந்த 25 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
பின்னர் வாடிக்கையாளர்கள் உள்ளே சென்ற பொழுது ஏடிஎம் எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





