--- --:--:-- --

காதலி மற்றும் மாமியாருடன் சேர்ந்து மாமனாரை கொலை செய்த இளைஞர்..!

7

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை தாய் மற்றும் காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது.

 

தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பா கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெட்டவெளி வயல் காற்றில் தலை மற்றும் கால்கள் துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சமவெளத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் அவரை நரபலி கொடுத்து கொலை செய்துவிட்டதாக குடும்பத்தினர் புகாரளித்தனர்.

 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. உயிரிழந்த அப்பாவின் மனைவி ஷோபா. மகள் ஹேமலதா மற்றும் அவரது காதலன் சாந்தகுமார் என மூவரும் சேர்ந்து கொலை செய்து நாடகம் ஆடியது அம்பலமானது.

 

காதலுக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால் மகளின் காதலனுடன் தாய், தகாத உறவிற்கு இடையூறாக இருந்ததாலும் மூன்று பேரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொன்றது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனை தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon