--- --:--:-- --

சுடுகாட்டில் இருந்து திடீரென எழுந்த பெண்..!

8

டிசாவில் இறந்ததாக நினைத்து இறுதி சடங்கு செய்த பொழுது பெண் உயிருடன் எழுந்ததால் உறவினர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

 

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தீ விபத்தில் சிக்கி இடையில் உரிய பணம் இல்லாததால் வீட்டிலேயே வைத்து பராமரிக்கப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் அயர்ந்த தூக்கத்தில் இருந்தவரை உறவினர்கள் இறந்துவிட்டதாக நினைத்து மரியாதை செய்தனர்.

 

மேலும் அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது கடைசி நேரத்தில் அந்த பெண் கண் திறந்து பார்த்ததால் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தற்பொழுது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon