--- --:--:-- --

தூங்கி கொண்டு இருந்த விவசாயி.. தூக்கி எறிந்த காட்டு யானை..!

13

திருப்பதியில் காட்டு யானை தாக்கியதில் வயலில் தூங்கிக் கொண்டிருந்த விவசாயி ஒருவரின் கை எலும்பு முறிந்தது. திருப்பதி அருகே சந்திரகிரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வயல்வெளிகளுக்கு அதிரடியாக யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் தினமும் இரவில் வந்து வாழை கரும்பு பயிர்களை தின்று சேதப்படுத்தி செல்வதாக கூறப்படுகிறது.

 

யானைகளை விரட்டுவதற்காக மனோகர் விவசாயி தனது வயலில் இரவில் தங்கி இருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த காட்டு யானை கூட்டம் கட்டிலில் படித்து தூங்கிக் கொண்டிருந்த மனோகர் ரெட்டியை தாக்கி கட்டிலை உடைத்து பயிர்களை தின்று நெற்பயிர்களை சேதப்படுத்தியது.

 

காட்டு யானைகள் தாக்கியதில் மனோகர் ரெட்டியின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon