வீட்டின் முன்பு தனியாக இருந்த பெண்.. கொடூரமாக நடந்த சம்பவம்..!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீட்டின் முன்பு தனியாக உறங்கிய மாற்றுத்திறனாளி பெண்ணை மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இருப்புலி ஊராட்சிக்கு உட்பட்ட குறுக்கு பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் இரவு வீட்டின் முன் உறங்கியவர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரது தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





