பரவும் மர்ம காய்ச்சல்.. 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதி..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உக்கத்தான் பாளையம் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களின் பச்சிளம் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த மூன்று வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த காய்ச்சலால் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 குழந்தைகளும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குழந்தைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு எலி காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பரிசோதனை முடிவுகள் வந்துள்ளதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





