தாம்பரம் துப்பாக்கி சூடு சம்பவம்.. அடுத்த கட்டம் நகரும் விசாரணை..!
தாம்பரத்தில் வழக்கறிஞர் வீடு உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 7 துப்பாக்கி தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று தாம்பரம் விமானப்படை தளத்தில் துப்பாக்கி சூடு பயிற்சி நடத்தப்பட்டதாக போலீசார் தகவலை வெளியிட்டுள்ளனர்.
விமானப்படை பயிற்சிக்காக வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சி தளத்தில் துப்பாக்கி வெடித்து தோட்டா பறந்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





