--- --:--:-- --

மதுரையில் இளைஞரை கொலை செய்ய கதவை உடைத்த இளைஞர்கள்..!

7

மேலூர் அருகே உயிரை காத்துக் கொள்ள உறவினர் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்த நபர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாவட்டம் மருதனூரை சேர்ந்த விஜய் என்பவரை கொலை செய்யும் நோக்கில் சிலர் துரத்தி இருக்கின்றனர். உயிர் பிழைக்க ஓடிய விஜய் ரத்த காயத்துடன் அருகே இருந்த உறவினர் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்துள்ளார்.

 

விஜய் தஞ்சம் அடைந்த வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்து அந்த கும்பல் விஜய் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon