ஆற்றில் கவிழ்ந்த கார் விபத்து.. மகனுக்காக ஒரு கோடி சன்மானம் அறிவித்த சைதை துரைசாமி..!
இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லா அருகே சட்லஜ் ஆற்றில் சைதை துரைசாமி மகன் வெற்றி சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. அந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதனை தொடர்ந்து சைதை துரைசாமியின் மகன் வெற்றியின் உதவியாளர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட மருத்துவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியது. மேலும் அவர் பற்றிய தகவல் அளித்தால் ஒரு கோடி சன்மானம் அளிக்கப்படும் எனவும் தொடர்ந்து அவர் மீட்பதற்கான மீட்பு பணியும் நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





