திடீரென ஓடும் லாரியில் வெடித்த டயர்..!
தேனியில் தேங்காய் நார் ஏற்றிச் சென்ற கண்டைனர் லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து தூத்துக்குடிக்கு தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு கண்டைனர் லாரி சென்று கொண்டிருந்தது.
நிலக்கட்டு அருகே வந்த பொழுது லாரியின் டயர் திடீரென வெடித்துள்ளது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்தது. இதில் நல் வாய்ப்பாக லாரி ஓட்டுனர் சிறுகாயத்துடன் உயிர் தப்பினார். மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





