கேம் விளையாட செல்போன் தராத 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..!
கேம் விளையாட செல்போனை சகோதரன் தராததால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நஞ்சை காரமங்கலம் பகுதியில் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகள் தர்ஷினி. அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்த வந்தார்.
செல்போனில் கேம் விளையாடுவது தொடர்பாக தர்ஷினிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் செல்போன் கேட்டு தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த தர்ஷினி படுக்கையறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெற்றோரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





