தகாத உறவை தட்டி கேட்ட கணவன்.. கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியின் வெறிச்செயல்..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவன் மற்றும் மாமனாரை கொன்று நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பகுதியை சேர்ந்தவர் சுப்பராயன்.இவருடைய மனைவி பத்மினி.
இவர்களுக்கு செந்தில்குமார், ராஜ்குமார் என இரண்டு மகள்கள் இருந்தனர். செந்தில்குமாரின் மனைவியான மேகலாவுக்கும் கார் ஓட்டுனர் ராஜேஷ் கண்ணா என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்த நிலையில் அதனை செந்தில்குமார் கண்டித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மேனகா கள்ளக்காதலுடன் சேர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு கணவரை கொலை செய்துவிட்டு உடலை புதைத்துள்ளனர். மேலும் மருமகளின் தகாத உறவை அறிந்து உயிரிழந்த செந்தில்குமார் தந்தை சுப்புராயினும் கடந்த 2018 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





