தெரியாமல் எலி மருந்து கலந்த தண்ணீரை குடித்த சிறுவன்..!
தூத்துக்குடி அருகே எலி மருந்து கலந்த தண்ணீரை தவறுதலாக குடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.
சாத்தான்குளம் அருகே வடக்கு ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் விக்னேஷ் எட்டாம் வகுப்பு படித்த வந்தார். இவரது வீட்டில் எலி தொல்லை இருந்து வந்ததால் எலி மருந்து பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி வீட்டில் அலமாரியில் இருந்து எலி மருந்து கீழே விழுந்ததில் அருகில் வைத்திருந்த சொம்பு தண்ணீரில் விழுந்துள்ளது.
இதனை கவனிக்காத சிறுவன் எலி மருந்து கலந்திருந்த தண்ணீரை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மயக்கம் அடைந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





