தள்ளாடும் போதையில் பேருந்தை ஓட்டி சுவற்றில் மோதிய ஓட்டுனர்..!
நாமக்கல் அருகே மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோடு அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பேருந்தினை ஓட்டுனர் வெங்கடாசலம் என்பவர் பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார்.
அப்பொழுது அவர் அதீத போதையில் இருந்ததால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோதி சேதமடைந்தது.
விபத்தின் போது பேருந்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தன்னிலை மறந்திருந்த பேருந்து ஓட்டுனரிடம் அந்த ஓட்டுனர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





