--- --:--:-- --

உத்திரபிரதேசம் ஜனவரி 22ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

2

அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட இருக்கிறது.

 

இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் 25 ஆயிரம் இந்து மத தலைவர்களுக்கும் அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

 

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது. இதனை தேசிய விழா என குறிப்பிட்டுள்ள மாநிலம் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜனவரி 22ஆம் தேதி மது விற்பனைக்கும் தடை விதித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon