--- --:--:-- --

புத்தாண்டு அன்று மகளை பறிகொடுத்த பெற்றோர்..!

9

கோவையில் 15 வயது சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கின்றனர்.

 

கோவை மாவட்டம் பாளையத்தில் சத்யபிரியா எனும் சிறுமி துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றாம் தேதி பணிக்கு சென்ற சத்யபிரியாவுக்கு விபத்து நேர்ந்ததாக சிறுமியின் தந்தை மணிகண்டன் என்பவர் தொலைபேசியில் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

 

செல்லப்பா கவுண்டனூர் பகுதியில் விபத்து நேர்ந்ததாகவும் சிறுமியுடன் மணிகண்டனும் தருண் என்பவரும் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சத்யபிரியா கடந்த 3ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசார்ரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

 

ஆனால் உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லை என குற்றம் சாட்டிய சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon