பள்ளி மாணவர்களிடையே கடும் மோதல்..!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தனியார் பள்ளியில் படித்து வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான மாணவர் ஒருவரை கும்பல் தாக்கிய வீடியோ வெளியான நிலையில் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் எட்டு பேரை கைது செய்தனர்.
தாக்குதல் வீடியோ வெளியிட்டவர்கள் உட்பட அனைவர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





