மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டிய கணவன்..!
விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் உன்னுடைய ஆபாச வீடியோக்களை வைரல் செய்வதாக மனைவிக்கு கணவன் விடுத்துள்ள மிரட்டல் சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த கிரன் பாட்டில் என்ற நபர் தனது மனைவியுடன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இதற்காக மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் முன் வைத்துள்ளார். மேலும் இரண்டாவது திருமணம் செய்யவும் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மனைவியோ விவாகரத்து வழங்க தயாராக இல்லை இதனால் ஆத்திரமடைந்த கிறன் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த மாணவியுடன் தனிமையில் இருந்த தருணங்களில் வீடியோக்களை காட்டி சமூக வலைதளங்களில் வைரல் செய்வதாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி பலமுறை கணவனை சமாதானம் செய்ய முயன்றும், கணவன் விவாகரத்து தருமாறு பிடிவாதமாக இருந்துள்ளார்.
இதனால் தனக்கு வேறு வழி தெரியாமல் கணவனுக்கு எதிராக சைபர் போலீசில் மனைவி புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய பொழுது அவருடைய போனில் மனைவியுடைய ஆபாச போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அதிகாரப்பூர்வமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





