2024 நாடாளுமன்ற திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அறிவிப்பு..!
தேர்தலில் கதாநாயகனாக இருப்பது தேர்தல் அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறுவார். அதன்படி 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வழக்கமாக மூத்த திமுக உறுப்பினர்களை கொண்டே தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். ஆனால் இந்த முறை இளம் ரத்தம் பாய்ச்சும் விதமாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இளையோர் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டள்ளது.
கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ. எழிலன் நாகநாதன், மேயர் பிரியா உள்ளிட்ட இளையோர்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர். பழனிவேல் தியகராஜன், கோவி. செழியன், ராஜேஸ்குமார் எம்.பி., ஆகிய புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.






