--- --:--:-- --

கேக் வெட்டி கொண்டாட்டத்தில் கிழக்கு வாசல் சீரியல் குழுவினர்..!

10

ராடான் நிறுவனம் தயாரிப்பில் விஜய் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாகி வரும் தொடர் கிழக்கு வாசல்.

 

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதியில் இருந்து ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியலில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன், அஷ்வினி என பலர் நடிக்கும் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.இந்த தொடரில் முதலில் சீரியல் நடிகர் சஞ்சீவ் நடிப்பதாக இருந்தது, ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற்றப்பட்டு வெங்கட் நாயகனாக கமிட்டானார்.

 

MN மனோஜ் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த கிழக்கு வாசல் தொடர் தற்போது 100வது எபிசோடை எட்டிவிட்டதாம். இதனால் சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon