--- --:--:-- --

குமரி கடலில் வீசும் சூறாவளி.. டிசம்பர் 27 வரை தமிழகத்தில் மாறும் வானிலை..!

2

மிழகத்தில் வரும் 27ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடியில் கோர தாண்டவம் ஆடிய மழையால் பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக தமிழ்நாடு முழுவதும் விற்பனைக்காக தேக்கு மரங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon