ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்தா..?

டிகை ஐஸ்வர்யா ராய் பற்றிய அறிமுகம் தேவையில்லை ஏன் என்றால் அந்த அளவிற்கு பிரபலம். இவர் கடந்த 2007 -ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

 

சமீபத்தில் அபிஷேக் பச்சன் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் கையில் திருமணம் மோதிரம் இல்லை. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அபிஷேக் பச்சன் பச்சன் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டாரா? இவருக்கு இடையே விவாகரத்து நடந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.

 

இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபிஷேக் பச்சன் தனது குடும்பத்துடன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட ஃபோட்டோஸ் வைரலாகி வருகிறது.

 

அபிஷேக்கின் அக்கா ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்திய நந்தா அறிமுகமாகும் ‘த ஆர்ச்சிஸ்’ படத்தின் பிரிமியர் ஷோவில்தான் ஒன்றாக கலந்து கொண்டனர். இதன்மூலம் இருவரும் ஒன்றாகத்தான் இருப்பதாக தெரியவருகிறது.