பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த திரௌபதி பட நடிகை..!

மிழ் சினிமாவில் 2016ம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஷீலா ராஜ்குமார். முதல் படத்தை தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்தார்.

 

தமிழ் மட்டுமில்லாது மலையாளத்திலும் நடித்த இவர் 2017ம் ஆண்டு ஜீ தமிழில் தமிழ்மகள் என்ற தொடரிலும் நடித்திருந்தார். இந்த தொடர் பெரிய ரீச் கொடுத்த அதன்பிறகு இவருக்கு திரௌபதி, மண்டேலா போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, அருமையாகவும் நடித்திருந்தார்.

 

இதனை தொடர்ந்து ஜோதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்க்க கடல் நடுவே சென்று மாலை மாற்றி படு வித்தியாசமாக ஷீலா திருமணம் செய்துகொண்டார். பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்துகொண்ட இவர் தற்போது தனது கணவரை பிரிவதாக பதிவு செய்துள்ளார்.