மிக்ஜாம் புயல் : சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் ரத்து

ங்கக் கடலில் உருவாகும் மிக்ஜாம் புயல், வருகின்ற 5 ஆம் தேதி சென்னையை ஒட்டி ஆந்திர மாநிலம் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று வானிலைஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில், புயல் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில் தெற்கு ரயில்வே சார்பில் சில ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கொல்கத்தா ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, அசாமில் இருந்து கன்னியாகுமரி வரும் ரயிலும் ரத்தாகியுள்ளது.

 

அத்துடன், இன்று சத்தீஸ்கரில் இருந்து நெல்லைக்கு வரும் ரயில் இரு மார்க்கத்திலும் ரத்தாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக மிக்ஜாம் புயல் காரணமாக 118 ரயில் சேவைகளை ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடைசி நேரத்தில் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள், திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், மாற்று போக்குவரத்தில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.