குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அதிரடி உத்தரவு..!
உச்ச நீதி மன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர சர்மா, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மற்றும் தவுஹாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை அளித்தது.
இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இந்த மூன்று புதிய நீதிபதிகளுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





