மயக்க மருந்து இல்லாமல் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் நிலை..!
காசாவில் மயக்க மருந்து இல்லாமல் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திவரும் நிலையில் நேற்று வரை போரில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைகளில் உரிய அடிப்படை வசதிகள் இன்றி மருத்துவமனைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மருத்துவர்கள் சோர்வடைந்து விட்டனர் என்றும் மயக்க மருந்து இல்லாமல் குழந்தைங்களுக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





