விசித்ரா சொன்ன வார்த்தை.. மீண்டும் கதறி அழுத அர்ச்சனா!
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோவில் கடந்த வாரம் மொத்தம் ஐந்து புது போட்டியாளர்கள் களமிறக்கி இருக்கின்றனர். மேலும் அதற்கு முன் வீட்டில் இருந்த இரண்டு போட்டியாளர்கள் ஒரே நாளில் எலிமினேட் செய்யப்பட்டனர்.
ராஜா ராணி 2 சீரியல் புகழ் நடிகை அர்ச்சனாவும் வைல்டு கார்டு எண்ட்ரியாக சென்று இருக்கிறார். அவர் வந்த முதல் நாளே மாயா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் பேசிய விதத்தால் எல்லோர் முன்பும் அர்ச்சனா கதறி அழுதார்.
இந்நிலையில் இன்று மீண்டும் அர்ச்சனா கதறி கதறி அழுதிருக்கிறார். விசித்ரா சொன்ன வார்த்தை தான் அதற்கு காரணம். அர்ச்சனா சின்ன விஷயத்திற்கு நீண்ட நேரம் பேசுகிறார் என விசித்ரா சொல்ல, அர்ச்சனா அதன் பின் பாத்ரூம் சுத்தம் செய்யும் போது அழுதுகொண்டே இருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




