வீடுகளுக்கு முன்பு இருந்த 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்..!
தர்மபுரி மாவட்டம் அரூர் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேல் பாற்றாபேட்டை, கீழ் பாற்றாபேட்டை, அசோதா பட்டறை, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இங்குள்ள மக்கள் வியாபாரம் மற்றும் சுய தேவைக்காக பயன்படுத்தும் வாகனங்களில் தங்களது வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் நள்ளிரவில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடுகளுக்கு முன்பு இருந்த 30க்கும் மேற்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் நகர் பகுதியில் தோன்றப்படுகிறது. முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





