--- --:--:-- --

திமுக எம்.பி ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை கையகம் செய்த அமலாக்கத் துறை!

7

2002 வருட சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குச் சொந்தமான 15 அசையா சொத்துகளை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.

 

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்பியுமான ஆ.ராசா, வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 33 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக கடந்த 2015ஆம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், ஆ.ராசா மற்றும் சில நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை கையகப்படுத்தியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

 

மேலும், குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த கோவை ஷெல்டர் புரமோட்டார்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் சொத்துக்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon