--- --:--:-- --

பிரதமர் மோடியிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு..!

6

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான மோதல் விவகாரத்தில் ‘பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், எந்தவொரு வகையில் வெளிப்பட்டாலும் அதை இந்தியா வன்மையாக கண்டிக்கும்’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

முன்னதாக, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் விடுதலைப் படையினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த 900 பேர் கொல்லப்பட்டனர், ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

 

இதையடுத்து, இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் குழுவைச் சேர்ந்த 17 ராணுவ அமைப்பின் மீது மேற்கொண்ட பதில் தாக்குதலில் 680-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

 

இஸ்ரேலில் நடைபெற்று வரும் ஹமாஸ் தாக்குதலை பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி, தனது x பக்கத்தில் , ” தொலைபேசி வாயிலாக தற்போதைய நிலைமை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தமக்கு தெரிவித்ததாக கூறினார்.

 

இந்தக் கடினமான தருணத்தில் இந்திய மக்கள் இஸ்ரேலுடன் உறுதியுடன் துணை நிற்கிறார்கள் என்றும். பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும், வெளிப்பாடுகளையும் இந்தியா வன்மையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon