குடிநீர் இல்லாமல் கஷ்டப்பட்ட மக்களுக்கு கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால்..!
நடிகர் விஷால் கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றி குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்த சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. நடிகர் விஷால் தனது 34-வது படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி மாவட்டம் சென்றிருந்தார்.
அப்பொழுது எம். குமாரசக்கணாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று நடிகர் விஷாலிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து உடனடியாக அந்த கிராமத்தில் போர் வசதி ஏற்படுத்த இரண்டு தண்ணீர் டாங்கு அமைத்து கிராம மக்கள் கோரிக்கை விஷால் நிறைவேற்றினார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





