--- --:--:-- --

டூவீலர் மீது மோதிய அரசு பேருந்து.. நண்பன் கண்முன்னே பறிபோன உயிர்..!

7

ள்ளக்குறிச்சியில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சங்கராபுரத்தை சேர்ந்த ஷேக் என்பவர் தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் இவரது நண்பரான கீரனூர் பகுதியை சேர்ந்த நபருடன் சென்னையிலிருந்து கிளம்பி பைக்கில் சந்திரபுரம் சென்றுள்ளார்.

 

பைக்கை ஷேக் வாங்கி ஓட்டிய நிலையில் கள்ளக்குறிச்சி சாலை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து பைக் மீது மோதியதில் ஷேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அரசு பேருந்து ஓட்டுனர் சுந்தரம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon