--- --:--:-- --

இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

10

மிழ்நாட்டில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக கடல் ஒரு பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையை பொறுத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியையும் இருக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon