சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம்..!

ந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது திறன்மேம்பாட்டு கழகத்தில் 300 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

சந்திரபாபு நாயுடு கைதுக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சந்திரபாபு நாயுடுவை விடுவிக்கக்கோரி அக்கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்றது.

 

அப்போது எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எம்எல்ஏக்கள் சந்திரபாபு நாயுடு கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தியப்படி முழுக்கமிட்டனர். மேலும் சபாநாயகர் இருக்கையை சூழ்ந்த அவர்கள், கடும் அமளியில் ஈடுபட்டனர்.