மாரிமுத்து அவர்களுக்கு 11 நாள் முன்னாடியே வயிற்றில்- அப்பல்லோ ரவி சொன்ன தகவல்

ன் தொலைக்காட்சியின் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் இப்போது சோகத்தின் உச்சத்தில் உள்ளார்கள். காரணம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த மாரிமுத்து அவர்கள் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

 

சினிமாவை ரசித்த அவர் எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போதே மூச்சு விட திணறியுள்ளார். பின் அவரே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார், அங்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பே உயிர் பிரிந்துவிட்டது.

 

இப்போதும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களால் அவர் இல்லாமல் தொடரை காண முடியவில்லை என்று தான் பதிவு செய்து வருகிறார்கள்.மாரிமுத்துவுடன் எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் அப்பல்லோ ரவி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

 

அதில் அவர் பேசும்போது, எதிர்நீச்சல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே 11 நாளுக்கு முன்னாடி நான் மாரிமுத்துவின் வயிற்றைப் பார்த்து அவரிடம் சார் என்ன வயிறு ஜெமினி பிரிட்ஜ் மாதிரி இருக்கு என்று கேட்டேன்.

 

காரணம் எப்போதும் இருப்பதை விட மாரிமுத்துவின் வயிற்றில் எனக்கு அப்போது மாற்றம் தெரிந்தது. அதற்கு அவர் என்னை பார்த்து எப்படி நீ இப்படி ஒரு கேள்வி கேட்கலாம் என கோபப்பட்டார்.

 

நான் மருத்துவத்துறையில் இருப்பதால் அவரிடம் ஒரு இரண்டு மணி நேரம் தானே எ கூட வந்து செக்கப் பண்ணி பார்க்கலாம் என கேட்டேன், அதற்கு என்னிடம் இனி அப்படி ஒரு கேள்வி கேட்காதே என்னை பார்த்தால் பேஷண்ட் மாதிரி இருக்கா என்று கேட்டார்.ஆனால் அதன்பிறகு சில நாட்களிலேயே இப்படி நடந்துவிட்டது, அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது என கூறியுள்ளார்.