மத்திய அரசின் திடீர் அறிவிப்பு.. 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம்..!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக வரும் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வருகின்ற 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அனைத்து கட்சி கூட்டத்திற்கான அழைப்பிதழ் அரசியல் தலைவர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது எனவும் நாடாளுமன்ற உபகரணங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சிறப்பு கூட்டத்தொடர் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





