விவசாயிகளை அலட்சியப்படுத்தி கூட்டத்தில் படுத்து தூங்கிய அரசு அதிகாரி..!
பெரம்பலூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அரசு அலுவலர்கள் தூங்கி வழிந்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். ஆட்சியர் அலுவலகக் கூட்டாரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் விவசாய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். அதிகாரி தூங்கி வழிந்ததால் மனு அளிக்க வந்த விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். மேலும் செல்போன்களை பயன்படுத்தியவாறு அதிகாரிகள் அமர்ந்திருந்ததால் விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





