--- --:--:-- --

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!

8

வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எனவும் இது படிப்படியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன் காரணமாக மேற்குவங்கம், உத்திர பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் 21 ஆம் தேதி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon