சாலையோர பனை மரத்தில் மோதிய கார்.. சீட் பெல்டால் தப்பிய நபர்..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் சாலையோர பனை மரத்தின் மீது கார் மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெண்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய பொழுது இந்த விபத்து நேர்ந்துள்ளது. சரவணன் சீல்டு பெல்ட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





