--- --:--:-- --

உப்பு தண்ணீர் குழாயில் காவிரி நீர்.. கொந்தளித்த மக்கள்..!

4

புதுக்கோட்டை மாவட்டத்தில் உப்பு தண்ணீர் வரும் குழாயிலேயே காவிரி நீரை இணைப்பதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தனர். அய்யனார்பட்டி கிராமத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீர் உப்பு நீராக உள்ளது.

 

இதனால் குடிதண்ணீருக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் இதனை சரி செய்ய காவிரி குடிநீர் தருவதாக கூறி ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது.

 

அதன்படி ஒரு வீட்டிற்கு தலா 2,000 ரூபாய் வசூல் செய்து போடப்பட்ட குழாயில் ஏற்கனவே இருந்த உப்பு தண்ணீரை இணைத்து இருப்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களுக்கு தனி குழாய் வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 

இது குறித்து கும்பங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாளிடம் கேட்ட பொழுது உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon