--- --:--:-- --

உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல்..!

5

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அமைச்ச நிர்மலா சீதாராமன் இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.

 

அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் இரும்பு பொருட்கள் வெண்கல பொருட்கள், தங்க, வெள்ளி பட்டயம் உட்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

 

அருங்காட்சியகம் அமைப்பதற்காக ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் ஐந்தரை ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியங்கள் அமைக்க மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon