கல்லூரி வளாகத்தில் நுழையும் குரங்குகளால் மாணவர்கள் அச்சம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் குரங்குகள் அடிக்கடி சுற்றித் திரிவதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயில்வதாக கூறப்படுகிறது.
800 மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரி வளாகத்தில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வகுப்பறைகளை திறந்தாலே குரங்குகள் நுழைந்து விடுவதாகவும் அச்சத்துடன் தினமும் வகுப்புகளுக்கு செல்வதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கல்லூரி வந்த போது மட்டும் பட்டாசு வெடித்து குரங்குகளை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியதாகவும் ஆனால் இதற்கு முழு தீர்வு காண வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





