அண்ணாமலைக்கு தொண்டர் அணிவித்த தக்காளி மாலை..!
நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வந்தபோது தக்காளி கோர்க்கப்பட்ட மாலையை தொண்டர்கள் அணிவித்தது கவனத்தை ஈர்த்தது. அதன் பின் அந்த தக்காளி மாலையை பெற்ற பாஜக பிரமுகர் ஒருவர் அங்கிருந்த மூதாட்டியிடம் வழங்கினார்.
சில இஸ்லாமியர்கள் அண்ணாமலைக்கு மெக்கா மதினா புகைப்படத்தை பரிசாக அளித்தனர். கடந்த 55 ஆண்டுகளாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்த கணேசன் என்ற நபரை சந்தித்து அவரது வாழ்த்துக்களையும் அண்ணாமலை பெற்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





