சந்தேக புத்தியால் மனைவியை கொலை செய்து நாடகம் ஆடிய கணவன்..!
விருதுநகர் மாவட்டம் நதிக்குடி அருகே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய கணவர் கைது செய்யப்பட்டார். பழனி – முத்துவல்லி ஆகியோருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 9ம் தேதி முத்துவல்லி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக முத்துவல்லியை அடித்துக்கொன்று விட்டு அவரை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல் பழனி நாடகமாடி இருப்பது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





