டாஸ்மாக்கிற்கு ஆர்பிஐயில் விலக்கு ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!
மது கொள்முதல் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க எந்த அடிப்படையில் டாஸ்மாக்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனம் யார் யாரிடம் இருந்து மது கொள்முதல் செய்கிறது என்ற விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க கோவையை சேர்ந்த லோகநாதன் விண்ணப்பித்திருந்தார்.
இதற்கான விவரங்களை அளிக்க டாஸ்மாக் மருத்துவ நிலையில் அதை எதிர்த்து லோகநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் டாஸ்மாக் வர்த்தகம் குறித்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க விளக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையில் எந்த அடிப்படையில் டாஸ்மாக் வர்த்தக விவரங்களை தகவல் அறியும் சட்டத்தில் வழங்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விளக்க கோரி வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





