பிரேக் சரியில்லை என்று கூறிய அரசு பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்தில் பிரேக் சரியில்லை என ஆர்டிஓ அலுவலகத்திற்கு பேருந்தை கொண்டு சென்ற பேருந்து ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 10 நாட்களாக இந்த பேருந்து 60 km வேகத்தில் இயக்கும்போது சுத்தமாக பிரேக் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் இது விபத்து ஏற்படுத்த கூடும் எனவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
ஆனால் தன் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி காரணமாக பேருந்தில் எந்த பழுதும் இல்லை எனக் கூறி போக்குவரத்து அதிகாரிகள் தரச் சான்று அளித்திருப்பதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





