மகளிர் உரிமை தொகை – அண்ணாமலை விமர்சனம்
வாக்களித்த மக்களை திமுக அரசு மீண்டும் ஒருமுறை ஏமாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியை அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என திமுக அரசு கூறியதாகவும் ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை பெறுவதற்கு நிபந்தனைகள் விதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
விசித்திரமான நிபந்தனைகளை இட்டுவிட்டு ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என முதலமைச்சர் எப்படி கூறுகிறார் என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் தமிழகத்தில் 80 விழுக்காடு குடும்ப தலைவிகளுக்கு அந்த தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிவதாக கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





