அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி.. சந்தேகத்தால் நடந்த விபரீதம்..!
மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன், மனைவியை பெல்டால் கழுத்தை நெரித்துக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டான். மாங்காடு அடுத்த கலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் களஞ்சியம்.
பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவருக்கு அம்பிகா என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில் சம்பவத்தன்று தம்பதியின் வீடு நீண்ட நேரம் பூட்டப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
கதவை உடைத்து அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்ற பொழுது அம்பிகா பெல்டால் கழுத்து நெறிக்கப்பட்டும், அவர் தூக்கில் தொங்கியும் உயிரிழந்து கிடந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அடிக்கடி அம்பிகா செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் அவர் நடத்தையின் மீது அவர் சந்தேகம் கொண்டது தெரிய வந்தது. இதில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





