பூசாரி சரமாரியாக வெட்டி படுகொலை.. துப்பாக்கி முனையில் கைது..!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூசாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டிவனம் அடுத்த பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பூசாரியாகவும் இருந்து கொண்டு மந்திரித்தும் வருகிறார்.
இந்நிலையில் வழக்கம் போல இரவு தன் கடையை மூடிவிட்டு சின்னநெற்குனத்தில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர் வீட்டருகே வரும்பொழுது வழிமறித்த மர்மநபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதையடுத்து சித்தாஊர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





